தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்று அறிவித்த அவர், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிரடிப் படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 2 டிஎஸ்பி, மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெறும் பெண் போலீஸார் மற்றும் பெண் எஸ்.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.







Comments
Join the discussion. First-time comments are reviewed before publishing.
No approved comments yet.